ஆந்திர அமைச்சராக பதவி ஏற்றார் நடிகை ரோஜா!

ஆந்திர மாநில அமைச்சராக பொறுப்பேற்றுக் கொண்ட நகரி எம்எல்ஏ நடிகை ரோஜா.

Update: 2022-04-11 08:29 GMT
ஆந்திர மாநில அமைச்சராக பொறுப்பேற்றுக் கொண்ட நகரி எம்எல்ஏ நடிகை ரோஜா.

மாநிலத்தில் புதிய அமைச்சரவை இன்று அமைக்கப்பட்டது. தொடர்ந்து அமராவதியில் உள்ள தலைமைச் செயலகம் அருகில் அமைக்கப்பட்டுள்ள அரங்கில் ஆந்திர மாநில ஆளுநர் விஸ்வ பூசன் ஹரிச்சரண் ஆந்திர முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி கலந்து கொண்டனர். இதில் ஆந்திர மாநிலத்தில் 25 பேர் அமைச்சர்களாக தற்போது உறுதிமொழி எடுத்து பொறுப்பேற்றுக் கொண்டனர். இதில் சித்தூர் மாவட்டம் நகரி தொகுதி எம்எல்ஏ ரோஜா அமைச்சராக பொறுப்பேற்றுக் கொண்டு கையெழுத்திட்டார். இவர்களுக்கான துறை இன்று மாலைக்குள் அறிவிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. சித்தூர் மாவட்டத்தில் மூன்று பேர் அமைச்சர்களாக பொறுப்பேற்றுள்ளனர்.
Tags:    

மேலும் செய்திகள்