"ஊர்வலம், சைக்கிள், பைக் பேரணி - தடை தொடரும்" - இந்திய தேர்தல் ஆணையம்

தேர்தல் நடைபெறும் மாநிலங்களில் சைக்கிள், பைக் பேரணி மற்றும் ஊர்வலங்களுக்கு விதித்த தடை தொடரும் என இந்திய தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

Update: 2022-02-06 07:34 GMT
தேர்தல் நடைபெற உள்ள உத்தரப் பிரதேசம், உத்தரகாண்ட், பஞ்சாப் உள்ளிட்ட 5 மாநிலங்களில் கொரோனா பெருந்தொற்றை கருத்தில் கொண்டு பல்வேறு கட்டுப்பாடுகளை தேர்தல் ஆணையம் விதித்தது. 

இந்தநிலையில் திருத்தி அமைக்கப்பட்ட கட்டுப்பாடுகள் மற்றும் தளர்வுகளை தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

அதன்படி பாதயாத்திரை,சைக்கிள் மற்றும் பைக் பேரணி, ஊர்வலம், சாலைப் பேரணி போன்றவற்றுக்கு ஏற்கனவே விதித்துள்ள தடை தொடரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதேபோல வீடு வீடாக சென்று வாக்கு சேகரிக்கும் நபர்களுடன் 20 பேர்கள் வரை மட்டுமே செல்லலாம் என்ற முந்தைய தளர்வும் தொடரும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

மாவட்ட அதிகாரிகளால் சிறப்பாக வரையறுக்கப்படும் குறிப்பிட்ட இடங்களில் மட்டுமே பொதுக்கூட்டங்கள் நடைபெற வேண்டும் எனவும் உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்