கர்நாடக பாஜக எம்.பி தேஜஸ்வி சர்ச்சை பேச்சு
மதம் மாறிய இந்துக்களை மீண்டும் இந்து மதத்திற்கு கொண்டு வர வேண்டும் என்று கர்நாடக பாஜக எம்.பி. தேஜஸ்வி சூர்யா சர்ச்சைக்குரிய வகையில் கூறி உள்ளார்
மதம் மாறிய இந்துக்களை மீண்டும் இந்து மதத்திற்கு கொண்டு வர வேண்டும் என்று கர்நாடக பாஜக எம்.பி. தேஜஸ்வி சூர்யா சர்ச்சைக்குரிய வகையில் கூறி உள்ளார். உடுப்பியில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பேசிய தேஜஸ்வி சூர்யா, இந்து மதத்தில் இருந்து மற்ற மதங்களுக்கு மாறியவர்களை, மீண்டும் இந்து மதத்திற்கே அழைத்து வர வேண்டும் என்று தெரிவித்தார். கோவில்களும், மடங்களும் வருடாந்திர இலக்கு வைத்து, இதனை செய்ய வேண்டும் என்றும் தேஜஸ்வி சூர்யா கூறினார். கர்நாடகாவில் சில நாட்களுக்கு முன்பு, மத மாற்ற தடை சட்ட மசோதா நிறைவேற்றப்பட்ட நிலையில், தேஜஸ்வி சூர்யா இவ்வாறு கூறியிருப்பது, குறிப்பிடத்தக்கது.
--