பாதுகாப்புத்துறை தொடர்பான நாடாளுமன்ற நிலைக் குழுவின் ஆலோசனை கூட்டம் - காங். எம்.பி. ராகுல்காந்தி வெளிநடப்பு

டெல்லியில் பாதுகாப்புத்துறை தொடர்பான நாடாளுமன்ற நிலைக் குழுவின் ஆலோசனைக் கூட்டத்தின் போது ராகுல்காந்தி வெளிநடப்பு செய்தார்.

Update: 2021-07-15 04:00 GMT
டெல்லியில் பாதுகாப்புத்துறை தொடர்பான நாடாளுமன்ற நிலைக் குழுவின் ஆலோசனைக் கூட்டத்தின் போது ராகுல்காந்தி வெளிநடப்பு செய்தார். 

பாதுகாப்பு துறைக்கான நாடாளுமன்ற நிலைக்குழு பாஜக எம்.பி ஜூவல் ஓரம் தலைமையில் செயல்படுகிறது. இந்நிலையில், இந்த குழுவின் ஆலோசனை கூட்டத்தில் கலந்து கொண்ட எம்பி ராகுல் காந்தி மற்றும் காங்கிரஸ் கட்சி எம்பிக்கள் கூட்டத்திலிருந்து வெளிநடப்பு செய்ததாக தகவல் வெளியாகியுள்ளது.எல்லையில் நிலவும் பிரச்சனை தொடர்பாக ஆலோசிக்க வேண்டும் என ராகுல் காந்தி கோரிக்கை விடுத்ததாகவும் அதற்கு நிலைக் குழுவின் தலைவர் மறுத்ததால் வெளிநடப்பு செய்ததாகவும் கூறப்படுகிறது. முன்னதாக கடந்த டிசம்பர் மாதம் ராகுல்காந்தி பாதுகாப்புத்துறை காலநிலை குழுவிலிருந்து வெளிநடப்பு செய்தது குறிப்பிடத்தக்கது.
Tags:    

மேலும் செய்திகள்