"நாடு வியாபாரம் செய்வதை எளிதாக்கி உள்ளது" - பிரதமர் நரேந்திர மோடி
வியாபாரம் செய்வதை நாடு, எளிதாக்கியுள்ளதாகவும், எனவே, சுலபமான வாழ்க்கைக்கு, மக்கள் வேலை செய்ய வேண்டும் பிரதமர் நரேந்திர மோடி வேண்டுகோள் விடுத்துள்ளார்.
டெல்லி ஐஐடியில் 51 வது ஆண்டு பட்டமளிப்பு விழாவில் காணொலி மூலம் பிரதமர் நரேந்திர மோடி உரையாற்றினார். அப்போது பேசிய அவர்,
சுய சார்பு இந்தியா மிகப்பெரிய சக்தி என கூறியுள்ளார். கோவிட் 19 பல விஷயங்களை, உலகிற்கு கற்பித்துள்ளது என கூறியுள்ளார். இந்தியா தனது இளைஞர்களுக்கு வியாபார யுக்தியை எளிதாக்கி உள்ளதாகவும், இதனால், இளைஞர்கள் வாழ்க்கையை தங்கள் கண்டுபிடிப்புகளால் மாற்ற முடியும் என்றும் பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். நாடு, வியாபாரம் செய்வதை எளிதாக்கும், என்றும், சுலபமான வாழ்க்கைக்கு வேலை செய்யுங்கள் என்றும் பிரதமர் மோடி வேண்டுகோள் விடுத்துள்ளார். ஒவ்வொரு துறையிலும் அதிகபட்ச திறனை அடைய நாடு புதிய வழிகளில் செயல்படுவதாகவும் எனவே தரத்தில் கவனம் செலுத்த வேண்டும் என்றும் அதில் ஒரு போதும் சமரசம் செய்ய வேண்டாம் என்றும் பிரதமர் மோடி குறிப்பிட்டுள்ளார்.