பாஜகவுடன் கூட்டு என்று மூத்த தலைவர்களை ராகுல் குறை கூறினாரா?- காராசார விவாதத்துடன் தொடர்கிறது காங்கிரஸ் காரிய கமிட்டி
தலைவர் தேர்வு மற்றும் நடப்பு அரசியல் பற்றி விவாதிப்பதற்காக சோனியா தலைமையில் தொடங்கிய காங்கிரஸ் செயற்குழு கூட்டம் காரசார விவாத த்துடன் தொடர்கிறது
டெல்லியில் காணொலி வாயிலாக காங்கிரஸ் செயற்குழு கூட்டம் நடைபெற்று வருகிறது. தலைமை மாற்றம் மற்றும் கட்சி சீரமைப்பு தொடர்பாக மூத்த தலைவர்கள் எழுதிய கடிதம் கூட்டத்தில் ல் புயலை கிளப்பியதாக தெரிகிறது. இதனிடையே மூத்த தலைவர்கள் சிலர் பாஜகவுடன் கூட்டு வைத்திருப்பதாக ராகுல் குற்றம் சாட்டியதாகவும் செய்தி வெளியானது. முதலில் இது குறித்து கருத்து வெளியிட்ட மூத்த தலைவர்கள் கபில்சிபல் மற்றும் குலாம் நபி ஆசாத் ஆகியோர் பின்னர் தங்கள் கருத்தை வாபஸ் பெற்றுக் கொண்டனர் . அப்படி ராகுல் காந்தி எதுவும் குறிப்பிட வில்லை என்று கூறி பிரச்சனைக்கு முற்றுப் புள்ளி வைத்தனர் . தலைமை மாற்றம் குறித்து தாங்கள் எதையும் வலியுறுத்த வில்லை என்றும் கட்சி மறுசீரமைப்பு பற்றி மட்டுமே கடித த்தில் குறிப்பிட்டிருந்தோம் என்றும் அண்மையில் சோனியாவுக்கு கடிதம் எழுதிய 20 மூத்த தலைவர்கள் கருத்து கூறியதாகவும் தகவல் வெளியாகி உள்ளது .. கூட்டத்தில் கருத்து மோதல்கள் இருந்தாலும் பெரும் பாலான மூத்த தலைவர்கள் ராகுல் காந்தி உடனடியாக கட்சி தலைமையை ஏற்க வேண்டும் என்று வலியுறுத்தியதாக தெரிகிறது