பீகாரில் புதிய கட்சி தொடங்கிய லண்டன் பெண் - முதல்வர் வேட்பாளராக அறிவித்து விளம்பரம்

லண்டனைச் சேர்ந்த புஷ்பம் பிரியா செளத்ரி என்ற பெண் பீகாரின் அடுத்த முதலமைச்சர் வேட்பாளராக தம்மை அறிவித்து ஆங்கில பத்திரிக்கைகளில் கொடுத்துள்ள விளம்பரம் பலரையும் கவர்ந்துள்ளது.

Update: 2020-03-10 07:45 GMT
புஷ்பம் பிரியா செளத்ரி பீகாரில் உள்ள முன்னாள் கவுன்சிலர் விநோத் சவுத்ரி என்பவரின் மகள். தற்போது லண்டனில் வசித்து வரும் இவர் ப்ளூரல் என்ற கட்சியினை பீகாரில் துவக்கியுள்ளார். இதற்காக அவர் பிரபல ஆங்கில நாளிதழில் விளம்பரம் கொடுத்துள்ளார். அதில் பீகாருக்கு இறக்கை தேவைப்படுவதாவும் நல்ல மாற்றம் வேண்டும் என்றும் கூறியுள்ளார். மோசமான பீகார் அரசியலை துடைத்தெடுக்க ப்ளூரலில் இணைந்திடுங்கள் எனவும் அதில் அவர் தெரிவித்துள்ளார். அவரின் இந்த விளம்பரத்திற்கு இணையதளத்தில் பலரும் ஆதரவு கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர். 

Tags:    

மேலும் செய்திகள்