மஹாராஷ்டிராவில் ஆட்சி அமைப்பது யார்? : இன்று சிவசேனா எம்எல்ஏக்கள் கூட்டம்

சரத்பவார் பின்வாங்கியதை தொடர்ந்து, மகாராஷ்டிராவில் புதிய ஆட்சி அமைப்பதில் இறுதி முடிவு எட்டப்படும் என எதிர்பார்க்கப்படும் நிலையில், இன்று சிவசேனா எம்எல்ஏக்கள் கூட்டம் நடைபெறுகிறது.

Update: 2019-11-07 02:05 GMT
மஹாராஷ்டிராவில் சட்டப்பேரவை தேர்தல் முடிவுகள் வெளியாகி 2 வாரமாகியும் புதிய அரசு அமைப்பதில் சிக்கல் நீடித்து வருகிறது. சிவசேனா தலைமையில் ஆட்சி அமைவதற்கு  ஆதரவு அளிக்க தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவார் திட்டவட்டமாக மறுத்து விட்டதால் பாஜக மற்றும் சிவசேனா கட்சிகள் இடையே சுமூக சூழல் எட்டும் நிலை உருவாகி உள்ளது. அதே நேரத்தில் நாளை மறுநாள் 9 ம் தேதியுடன் தற்போதைய பேரவையின் பதவிக்காலம் முடிவடைவதால் இறுதிகட்ட சமரச முயற்சியில் பாஜக தலைவர்கள் ஈடுபட்டுள்ளனர். இந்த நிலையில் சிவசேனா கட்சியின் புதிய எம்எல்ஏக்கள் கூட்டம் மும்பையில் இன்று நடைபெறுகிறது. அதில் முக்கிய முடிவு எடுக்கப்படும் என்று கூறப்படுகிறது. இதற்கிடையே பாஜக சட்டப்பேரவை தலைவரும் தற்போதைய முதல்வருமான தேவேந்திர பட்னாவிஸ், இன்று ஆளுநரை சந்திப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.
Tags:    

மேலும் செய்திகள்