"மக்களை பிளவுபடுத்தி அரசியல் செய்யும் மத்திய அரசு" - பிரகாஷ்காரத் குற்றச்சாட்டு
நாட்டின், அரசியல் சட்டத்தை நீர்த்துப் போகச் செய்யும் முயற்சிகளை மத்திய அரசு செய்து வருவதாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் பிரகாஷ் காரத் குற்றம் சாட்டினார்.
நாட்டின், அரசியல் சட்டத்தை நீர்த்துப் போகச் செய்யும் முயற்சிகளை மத்திய அரசு செய்து வருவதாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் பிரகாஷ் காரத் குற்றம் சாட்டினார். சேலத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பேசிய அவர், மதத்தின் அடிப்படையில் நாட்டை பிரிக்க முதன் முதலில் குரல் கொடுத்த சாவர்க்கருக்கு பாரத ரத்னா விருது கொடுக்க பிஜேபி அரசு திட்டமிட்டுள்ளதாக விமர்சனம் செய்தார். பொருளாதார வீழ்ச்சி மற்றும் மந்த நிலை காரணமாக வேலைவாய்ப்பு குறைந்துள்ளதை சரிசெய்வதற்கு பதிலாக, மக்களை மத அடிப்படையில் பிளவுபடுத்த முயற்சி செய்து வருவதாகவும் பிரகாஷ் காரத் குற்றம் சாட்டினார்.