போலி ஆவணங்கள் தயாரித்து நில அபகரிப்பு : திமுக மாநில நிர்வாகி கைது
மதுரையில் போலியாக அரசு ஆவணங்களை தயாரித்து நிலம் அபகரித்த திமுக மாநில நிர்வாகியை போலீசார் கைது செய்தனர்.
மதுரையில் போலியாக அரசு ஆவணங்களை தயாரித்து நிலம் அபகரித்த திமுக மாநில நிர்வாகியை போலீசார் கைது செய்தனர். மதுரை பை-பாஸ் SRV சுரேந்திரன் நகர் பகுதியில் பாக்கியலட்சுமி என்பவருக்கு சொந்தமான 5 கோடி ரூபாய் மதிப்பிலான சொத்தை 20க்கும் மேற்பட்டவர்களின் போலியான ஆதார் , வாக்காளர் அட்டை உள்ளிட்ட ஆவணங்களை தயாரித்தும், போலியான ஆவணங்களை சமர்பித்தும் முறைகேடு செய்யப்பட்டுள்ளது. இது குறித்து பாதிக்கப்பட்டவர் அளித்த புகாரின் பேரில் திமுக மாணவரணி மாநில துணை செயலாளர் அதலை செந்தில் உள்ளிட்ட 6 பேரை போலீசார் கைது செய்தனர்.