காலநிலை மாற்றம் தொடர்பான தீர்மானம் - பா.ம.க.வினருக்கு ராமதாஸ் யோசனை
காலநிலை மாற்றத்தால் ஏற்படும் அழிவு மற்றும் ஆபத்தில் இருந்து மக்களை பாதுகாக்க, நாளை நடைபெறும் கிராம சபைக் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்ற பா.ம.க.வினர் உதவ வேண்டும் என அக்கட்சியின் நிறுவனத் தலைவர் ராமதாஸ் கேட்டுக் கொண்டுள்ளார்.
காலநிலை மாற்றத்தால் ஏற்படும் அழிவு மற்றும் ஆபத்தில் இருந்து மக்களை பாதுகாக்க, நாளை நடைபெறும் கிராம சபைக் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்ற பா.ம.க.வினர் உதவ வேண்டும் என அக்கட்சியின் நிறுவனத் தலைவர் ராமதாஸ் கேட்டுக் கொண்டுள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், நாளை நடைபெற உள்ள கிராம சபைக் கூட்டங்களில், மத்திய, மாநில அரசுகள் காலநிலை மாற்ற அவசர நிலையை பிரகடனம் செய்ய வேண்டும் என்று வலியுறுத்தி தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் என்று கோரியுள்ளார். காலநிலை ஆபத்து குறித்து, தொடக்க நிலை அதிகாரிகளுக்கும், மக்களுக்கும் அவ்வளவு அறிமுகம் இல்லாத விசயம் என்பதால், வாய்ப்புள்ள இடங்கள் அனைத்திலும் பா.ம.க. மற்றும் பசுமைத் தாயகம் அமைப்பை சேர்ந்தவர்கள் கலந்து கொண்டு, காலநிலை மாற்றத்தின் விளைவுகள் குறித்து கிராம சபைக் கூட்டத்தில் விளக்கி தீர்மானம் நிறைவேற்ற உதவ வேண்டும் என்றும் அதில் ராமதாஸ் கேட்டுக் கொண்டுள்ளார்.