"காஷ்மீரில் விரைவில் தேர்தல் மூலம் பிரதிநிதிகள் தேர்வு"- பிரதமர் நரேந்திரமோடி

ஜம்மு- காஷ்மீரில், விரைவில் தேர்தல் நடத்தப்பட்டு, மக்கள் பிரதிநிதிகள் தேர்வு செய்யப்படுவார்கள் என்று பிரதமர் நரேந்திரமோடி உறுதி அளித்துள்ளார்.

Update: 2019-08-14 18:31 GMT
ஜம்மு- காஷ்மீரில், விரைவில் தேர்தல் நடத்தப்பட்டு, மக்கள் பிரதிநிதிகள் தேர்வு செய்யப்படுவார்கள் என்று பிரதமர் நரேந்திரமோடி உறுதி அளித்துள்ளார். புதுடெல்லியில், செய்தி நிறுவனத்திற்கு பேட்டி அளித்த அவர்,  உள்ளூர் மக்களின் விருப்பப்படி, ஜம்மு- காஷ்மீர் மற்றும் லடாக் பகுதியில் வளர்ச்சி இருக்கும் என்றார். 370 வது பிரிவு மற்றும் 35 ஏ ஆகிய பிரிவுகள் மக்களின் வளர்ச்சிக்கு தடையாக இருந்தது என குறிப்பிட்ட பிரதமர் நரேந்திரமோடி, வளர்ச்சியை தடுத்துக்கொண்டிருந்த சங்கிலி, இப்போது உடைந்து விழுந்து விட்டதாக விளக்கம் அளித்தார். இதனிடையே, மார்ச் மாதம் காஷ்மீர் சட்டப்பேரவைக்கு தேர்தல் நடத்த மத்திய அரசு முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
Tags:    

மேலும் செய்திகள்