ஏழை மக்களுக்கு கசப்பு - கார்ப்பரேட்களுக்கு இனிப்பு : 2019 பட்ஜெட் குறித்து திமுக தலைவர் ஸ்டாலின் கருத்து

நிதிநிலை அறிக்கை ஏழை, எளிய மக்களுக்கு கசப்பையும், கார்ப்பரேட்களுக்கு இனிப்பையும் வழங்கியுள்ளதாக திமுக தலைவர் ஸ்டாலின் புகார் கூறியுள்ளார்.

Update: 2019-07-05 18:15 GMT
மத்திய பா.ஜ.க அரசின் நிதிநிலை அறிக்கை, வழக்கம் போல் "அலங்கார வார்த்தைகளும்" "அறிவிப்புகளும்" நிறைந்த அணிவகுப்பாகக்  காட்சியளிப்பதாக புகார் கூறினார். சமையல் எரிவாயு சிலிண்டர்களுக்கு அளிக்கப்படும் குறைந்தபட்ச மான்யத்தையும் பறிக்கும் முழக்கமே பட்ஜெட் உரையில் இடம்பெற்றுள்ளதாக ஸ்டாலின் கூறியுள்ளார். தமிழகத்திற்கென்று எந்த பிரத்தியேகத் திட்டங்களுக்கும் நிதி ஒதுக்கீடு செய்யப்படவில்லை. என்றும், நதிகள் இணைப்புத் திட்டம் பற்றி நிதி நிலை அறிக்கையில் எந்த அறிவிப்பும் இல்லை என்றும் ஸ்டாலின் குற்றஞ்சாட்டியுள்ளார். இந்த நிதி நிலை அறிக்கையில் 400 கோடி ரூபாய் வரை "டேர்ன் ஓவர்" உள்ள கார்ப்பரேட் கம்பெனிகளுக்கு வரிச்சலுகை அளித்துள்ள நிலையில், விவசாயிகளின் கடன் தள்ளுபடி மற்றும் ஏழை மாணவர்களின் கல்விக்கடன் தள்ளுபடி குறித்து அறிவிப்பு எதுவும் இல்லாதது ஏமாற்றம் அளிக்கிறதாகவும் திமுக தலைவர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். 
Tags:    

மேலும் செய்திகள்