"2019-2020 பட்ஜெட் - புதிய இந்தியாவை உருவாக்கும்" : பிரதமர் நரேந்திர மோடி

புதிய இந்தியாவை உருவாக்கும் வகையில் 2019-2020 பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.

Update: 2019-07-05 12:36 GMT
மத்திய பட்ஜெட் குறித்து கருத்து தெரிவித்துள்ள அவர், இந்த பட்ஜெட் இளைஞர்கள், பெண்கள், கிராமபுற மக்கள், மத்திய வகுப்பினர், ஏழைகள் என அனைவருக்குமானது என்றும் அவர் கூறியுள்ளார். இதன் மூலம் மத்திய தர வகுப்பினர் அதிகளவில் பயனடைவார்கள் என்றும், வளர்ச்சி வேகம் அதிகரிக்கும் என்றும் பிரதமர் மோடி தெரிவித்தார். இந்த பட்ஜெட்டினால், வரி விதிப்பு எளிதாகும் என்றும், உள்கட்டமைப்பு நவீனமயமாக்கப்படும் என்றும் பிரதமர் மோடி கருத்து கூறியுள்ளார். விவசாயத்துறையை மேம்படுத்தவும், இந்த பட்ஜெட்டில் வழி வகை செய்யப்பட்டுள்ளதாகவும் பிரதமர்மோடி குறிப்பிட்டுள்ளார்.
Tags:    

மேலும் செய்திகள்