பட்ஜெட் தாக்கல் செய்த முதல் பெண் இந்திரா காந்தி : சுவையான தகவல்கள்
2019 - 2020 ஆம் நிதியாண்டிற்கான பட்ஜெட்டை, மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்துள்ளார். இதற்கு முன் எத்தனை பெண் நிதியமைச்சர்கள் இது போன்று பட்ஜெட் தாக்கல் செய்துள்ளனர் என்பதை பார்ப்போம்.
நாட்டின், 1970-71 ஆம் நிதியாண்டிற்கான பட்ஜெட்டை, அப்போதைய பிரதமர் இந்திரா காந்தி நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்தார். இரண்டாவது பெண் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் ஆவார். பிரதமராக பதவி வகித்தாலும், நிதி பொறுப்பை தம்மிடம் வைத்திருந்ததால், இந்திரா காந்தி, பட்ஜெட்டை தாக்கல் செய்தார். இதன் மூலம் நாடாளுமன்றத்தில் பட்ஜெட்டை தாக்கல் செய்த முதல் பெண் நிதியமைச்சர் என்ற பெருமையை அவர் பெற்றார். இதே போல், நாடாளுமன்றத்தில் அதிக முறை பட்ஜெட் தாக்கல் செய்தவர் என்ற பெருமையை, மெரார்ஜி தேசாயை சாரும். இவர் 1959 - 1963, மற்றும் 1967 - 1969, ஆண்டிற்கான பட்ஜெட்டை அவர் தாக்கல் செய்துள்ளார். இது தவிர, 1962-63, 1967 - 68 ஆம் ஆண்டிற்கான இடைக்கால பட்ஜெட்டையும் நிதியமைச்சராக பதவி வகித்த மொரார்ஜி தேசாய் தாக்கல் செய்துள்ளார்.