"நீட் தேர்வினால் எந்த நன்மையுமில்லை" - தமிழக எம்.பி கவுதம் சிகாமணி பேச்சு
"தேசிய மருத்துவ சட்ட திருத்த மசோதாவுக்கு எதிர்ப்பு"
நீட் தேர்வினால் எந்த நன்மையுமில்லை என மக்களவையில் தி.மு.க. எம்.பி. கவுதம் சிகாமணி தெரிவித்துள்ளார். இதனால் பயிற்சி மையம் 12 ஆயிரம் கோடி லாபம் பார்ப்பதாக குற்றம்சாட்டிய அவர், நீட் தேர்வில் ஏழை எளிய மாணவர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாக கூறினார். தேசிய மருத்துவ சட்ட திருத்த மசோதாவை தி.மு.க. கடுமையாக எதிர்ப்பதாகவும், இந்த விவகாரத்தில் மாநிலம் மற்றும் மருத்துவ பல்கலைக் கழகங்களின் உரிமை பறிக்கப்படுவதாக கவுதம் சிகாமணி பேசினார். மேலும், கள்ளக்குறிச்சியில், மருத்துவக் கல்லூரி அமைப்பதோடு மட்டுமின்றி ஆத்தூர் அரசு மருத்துவமனையின் தரத்தை உயர்த்த வேண்டும் எனவும் கோரினார்.