ஸ்டாலின் தலைமையில் 24ஆம் தேதி கண்டன ஆர்ப்பாட்டம்...
சென்னையில் நிலவி வரும் குடிநீர் பஞ்சத்தை போக்க வலியுறுத்தி, திமுக தலைவர் ஸ்டாலின் தலைமையில் நாளை மறுநாள் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது.
சென்னையில் தண்ணீர் பஞ்சம் அதிகரித்துள்ள நிலையில், திமுக சார்பில் பல்வேறு இடங்களில் இன்று போராட்டம் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் வரும் 24 ஆம் தேதி திங்கட்கிழமை சென்னை சேப்பாக்கம் விருந்தினர் மாளிகை முன்பு திமுக தலைவர் ஸ்டாலின் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது. இது குறித்து திமுக மாவட்ட செயலாளர் அன்பழகன் விடுத்துள்ள அறிக்கையில், சென்னையில் தண்ணீரின்றி உணவகங்கள், தங்கள் விடுதிகள், பள்ளிக்கூடங்கள் மூடப்பட்டுள்ளதற்கு ஆளும் அதிமுக அரசு தான் காரணம் என குற்றஞ்சாட்டியுள்ளார்.