மக்களால் தேர்வாகாமல் மத்திய அமைச்சர் ஆனவர்கள்...

கடந்த மத்திய அமைச்சரவையில், மாநிலங்களவை உறுப்பினர்களாக இருந்த சிலர் மக்களவைக்கு தேர்வாகாமல், முக்கியத் துறைகளின் அமைச்சர்களாக பணியாற்றினர்.

Update: 2019-05-30 02:33 GMT
கடந்த மத்திய அமைச்சரவையில், மாநிலங்களவை உறுப்பினர்களாக இருந்த சிலர் மக்களவைக்கு தேர்வாகாமல், முக்கியத் துறைகளின் அமைச்சர்களாக பணியாற்றினர். 

நாட்டின் மிக முக்கியத்துறையான நிதி, ராணுவம், ரயில்வே சட்டம் ஆகிய துறைகளின் அமைச்சர்களாக இருந்தவர்கள் மக்களை நேரிடையாக சந்திக்காமல், ராஜ்யசபா எம்,.பிக்களாக தேர்வு பெற்றவர்கள். கடந்த அமைச்சரவையில், அருண் ஜேட்லி, ஸ்மிருதி ராணி, பியுஷ்கோயல், பிரகாஷ் ஜவடேகர், நிர்மலா சீதாராமன் ரவி சங்கர் பிரசாத், சுரேஷ்பிரபு, உள்ளிட்டோர் எம்.பி.க்களாக தேர்வு செய்யப்பட்டனர். இவர்களில் குறிப்பாக, டெல்லியை சேர்ந்த அருண்ஜேட்லி, கடந்த 2014 மக்களவை தேர்தலில் தோல்வியடைந்தாலும், மாநிலங்களவை உறுப்பினராக தேர்வு செய்யப்பட்டார். அவரிடம் முக்கியத்துவம் வாய்ந்த, நிதித்துறை ஒப்படைக்கப்பட்டது. ஆனால், தற்போது அமைய உள்ள புதிய அமைச்சரவையில், உடல்நிலை காரணமாக, பொறுப்பை ஏற்க அருண் ஜெட்லி விரும்பவில்லை.  

இதே போல், கடந்த 2014 ஆம் ஆண்டு மக்களவை தேர்தலில், அமேதி தொகுதியில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியை எதிர்த்து போட்டியிட்ட ஸ்மிரிதி ராணி தோல்வியை தழுவினார். ஆனாலும், ராஜ்யசபா எம்.பி.யாக தேர்வு செய்யப்பட்டு, மனித வள மேம்பாட்டுத்துறை அமைச்சராக்கப்பட்டார். தற்போது நடைபெற்ற மக்களவை தேர்தலில் அமேதியில் ராகுலை எதிர்த்து போட்டியிட்ட ஸ்மிரிதி ராணி, வெற்றி பெற்றுள்ளார். இதே போல் மாநிலங்களவை எம்.பியாக தேர்வான, நிர்மலா சீதாராமன் நாட்டின் முதல் பெண் ராணுவ அமைச்சராக தேர்வு செய்யப்பட்டார்.  

மேலும், பியுஷ்கோயல், பிரகாஷ் ஜவடேகர், சுரேஷ் பிரபு, தர்மேந்திர பிரதான், முக்தார் அப்பாஸ் நக்வி, ரவி சங்கர் பிரசாத், ஷிவ் பிரதாப் சுக்லா, விஜய் பால் சிங் தோமர் ஆகியோரும், மத்திய அமைச்சர்களாக பணியாற்றினர். இவர்களில் யார் யாருக்கு மீண்டும் அமைச்சர் பதவி வழங்கப்படும் என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும். 

Tags:    

மேலும் செய்திகள்