கர்நாடகாவில் காங்கிரஸ் கூட்டணி படுதோல்வி - மல்லிகார்ஜூனா, வீரப்ப மொய்லி அதிர்ச்சி தோல்வி
கர்நாடகாவில் காங்கிரஸ் கூட்டணி படுதோல்வியை சந்தித்துள்ளது. கர்நாடகாவில் உள்ள 28 மக்களவை தொகுதிகளில், பா.ஜ.க. 25 இடங்களை வென்றுள்ளது.
கர்நாடகாவில் காங்கிரஸ் கூட்டணி படுதோல்வியை சந்தித்துள்ளது. கர்நாடகாவில் உள்ள 28 மக்களவை தொகுதிகளில், பா.ஜ.க. 25 இடங்களை வென்றுள்ளது. முன்னாள் முதலமைச்சர் எடியூரப்பாவின் மகன் ராகவேந்திரா, ஷிமோகா தொகுதியில் வெற்றி பெற்றுள்ளார்.
ஆளுங்கட்சிகளான காங்கிரஸ் மற்றும் மதசார்பற்ற ஜனதா தளம் ஆகிய கட்சிகள் தலா ஒரு இடத்தில் மட்டுமே வென்றுள்ளன. தும்கூர் தொகுதியில் முன்னாள் பிரதமரும், மதசார்பற்ற ஜனதா தளம் தலைவருமான தேவகவுடா, 13 ஆயிரம் வாக்கு வித்தியாசத்தில் தோல்வியடைந்தார். இதேபோல அவரது பேரனும், முதலமைச்சர் குமாரசாமியின் மகனுமான நிக்கில், மண்டியா தொகுதியில் தோல்வியை சந்தித்துள்ளார்.
ஆனால், தேவகவுடாவின் மற்றொரு பேரனான பிரஜ்வால் ரெவேனா, ஹாசன் தொகுதியில் வெற்றி பெற்றார். மக்களவை காங்கிரஸ் கட்சித் தலைவர் மல்லிகார்ஜூனா கார்கே குல்பர்கே தொகுதியில் தோல்வி அடைந்தார். இதே போன்று காங்கிரஸ் மூத்த தலைவர் வீரப்ப மொய்லியும் கர்நாடகாவில் தோல்வியை சந்தித்தார்.