தற்போது ஸ்டாலினை தவிர வேறு தலைவன் திமுகவுக்கு இல்லை - துரை முருகன்

தற்போது ஸ்டாலினை தவிர வேறு தலைவன் தி.மு.க.வுக்கு இல்லை என அக்கட்சியின் பொருளாளர் துரைமுருகன் தெரிவித்துள்ளார்.

Update: 2019-05-06 09:32 GMT
தற்போது ஸ்டாலினை தவிர வேறு தலைவன் தி.மு.க.வுக்கு இல்லை என அக்கட்சியின் பொருளாளர் துரைமுருகன் தெரிவித்துள்ளார். தூத்துக்குடி ஸ்பிக் நகரில் நடந்த தி.மு.க. நிர்வாகிகள் கூட்டத்தில் பேசிய அவர், எந்த ஒரு சலசலப்பும் இல்லாமல் கருணாநிதிக்கு பின்னால் ஸ்டாலினை தலைவராக ஏற்றுகொண்ட இயக்கம் திமுக மட்டும் தான் என நெகிழ்ச்சியுடன் தெரிவித்தார்.  18 தொகுதிகளில் வெற்றி பெறமாட்டோம் என தெரிந்ததால் தான், எடப்பாடி பழனிசாமி 4 தொகுதி சட்டமன்ற தேர்தல் மற்றும் சட்டமன்ற உறுப்பினர்களை தகுதிநீக்கம் செய்வதில் அதிக அக்கறை காட்டுவதாக தெரிவித்தார். 
Tags:    

மேலும் செய்திகள்