குடிநீர் பிரச்சினையை தீர்க்க கோரி தம்பிதுரையை முற்றுகையிட்ட கிராம மக்கள்...

லந்தக்கோட்டை பகுதியில் வாக்கு சேகரிக்க சென்ற போது குடிநீர் பிரச்சினையை தீர்க்க கோரி அப்பகுதி மக்கள் தம்பிதுரையை முற்றுகையிட்டனர்.

Update: 2019-04-08 11:50 GMT
கரூர் மக்களவை தொகுதியில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர் தம்பிதுரை திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் அருகே பிரசாரம் மேற்கொண்டார். குஜிலியம்பாறை லந்தக்கோட்டை பகுதியில் அவர் வாக்கு சேகரிக்க சென்ற போது அப்பகுதி மக்கள் தம்பிதுரையை முற்றுகையிட்டனர். மஞ்சள் நிறத்தில் குடிநீர் வருவதாகவும், இது தொடர்பாக எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று கூறி அவர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. 
Tags:    

மேலும் செய்திகள்