"பாஜகவினருக்கு தமிழகத்தில் இடமில்லை என்பதற்கான தேர்தல்"- நாஞ்சில் சம்பத்

திமுக கூட்டணி வேட்பாளரை ஆதரித்து பிரசாரம்

Update: 2019-03-31 00:37 GMT
நாமக்கல் நாடாளுமன்ற தொகுதியில் திமுக கூட்டணி சார்பில் 
கொங்கு நாடு மக்கள் தேசிய கட்சியின் வேட்பாளர் சின்ராஜை ஆதரித்து, நாஞ்சில் சம்பத் பிரசாரம் மேற்கொண்டார்.  ராசிபுரம் பகுதியில் பேசிய அவர், 
21 தொகுதிகளுக்கும் இடைத்தேர்தல் நடந்தால் ஸ்டாலின் முதலமைச்சராகிவிடுவார் என்பதால், அதிகாரத்தின் துணையுடன் மோடியின் காலடியில் விழுந்து கிடக்கின்றனர் என்றார். பாஜகவினருக்கு தமிழகத்தில் இடமில்லை என்பதற்கான தேர்தல் இது என்ற அவர், ரயில்வே துறையில் வெளி மாநிலத்தவர்களை பணியில் அமர்த்தியுள்ளனர் எனவும் குற்றம்சாட்டினார்.
Tags:    

மேலும் செய்திகள்