துவங்கியது காங்கிரஸ் காரிய கமிட்டி கூட்டம் : காங்கிரஸ் மூத்த தலைவர்கள் பங்கேற்பு

டெல்லியில் உள்ள அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் தலைமை அலுவலகத்தில் "காங்கிரஸ் காரிய கமிட்டி கூட்டம்" அக்கட்சியின் தலைவர் ராகுல்காந்தி தலைமையில் தொடங்கியது.

Update: 2019-03-25 08:22 GMT
டெல்லியில் உள்ள அகில இந்திய காங்கிரஸ்  கட்சியின் தலைமை அலுவலகத்தில் "காங்கிரஸ் காரிய கமிட்டி கூட்டம்" அக்கட்சியின் தலைவர் ராகுல்காந்தி தலைமையில் தொடங்கியது. இந்த கூட்டத்தில் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும், முன்னாள் பிரதமருமான மன்மோகன்சிங், மூத்த தலைவர்கள் அகமது பட்டேல், ஏ.கே.அந்தோணி, குலாம் நபி ஆசாத், ப.சிதம்பரம், மல்லிகார்ஜூனகார்கே, உள்ளிட்டோர் கலந்து கொண்டுள்ளனர். இதில், முன்னாள் மத்திய நிதி அமைச்சர் ப.சிதம்பரம் தலைமையிலான குழு தயாரித்துள்ள காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அறிக்கை இறுதி செய்வது குறித்து ஆலோசிக்கப்பட உள்ளதாக தெரிகிறது. இந்த நிலையில் காங்கிரஸ் தேர்தல் அறிக்கை நாளை வெளியாக வாப்புள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
Tags:    

மேலும் செய்திகள்