நாட்டின் விமானப்படையை சந்தேகிப்பது கட்சி தலைவருக்கு அழகல்ல - பாஜக தலைவர் அமித் ஷா கடும் விமர்சனம்

ராகுல் காந்தியின் ஆலோசகர் சாம் பிட்ரோடா தெரிவித்த கருத்துக்கு பாஜக தலைவர் அமித்ஷா கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

Update: 2019-03-24 04:30 GMT
7, 8 பேர் இந்தியாவுக்குள் வந்து தாக்குதல் நடத்தியதற்காக பாகிஸ்தான் நாட்டையே குற்றம் சொல்வதை ஏற்க முடியாது என்று காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியின் ஆலோசகரும் அக்கட்சியின் வெளிநாட்டு விவகார தலைவருமான சாம் பிட்ரோடா,சர்ச்சைக்குரிய கருத்தை வெளியிட்டு இருந்தார்.இதற்கு பதிலளிக்கும் வகையில் கருத்து தெரிவித்துள்ள பாஜக தலைவர் அமித் ஷா,சாம் பிட்ரோடாவின் கருத்தை ராகுல் ஆதரிக்கிறாரா என்றும் புல்வாமா தாக்குதல் வழக்கமான ஒரு சம்பவமா என்பதை ராகுல் தெளிவுப்படுத்த வேண்டும் என்று கேள்வி எழுப்பி உள்ளார்.கருத்து சுதந்திரம் என்ற போர்வையில் நாட்டிற்கு எதிரான கருத்தை ஆதரிப்பதும், நாட்டின் விமானப்படையை சந்தேகிப்பதும் ஒரு கட்சி தலைவருக்கு அழகல்ல என்றும் அவர் விமர்சித்து உள்ளார்.மேலும், இந்தியாவில் நடக்கும் தீவிரவாத தாக்குதல்களுக்கு பாகிஸ்தான் ராணுவமும், அந்நாட்டின் தீவிரவாதிகளும் காரணமில்லை என்றால் வேறு யார் காரணம் என்று காங்கிரஸ் பதிலளிக்க வேண்டும் என்றும் ​கேள்வி எழுப்பியுள்ளார்.தீவிரவாதிகள் தாக்குதலுக்கு பதில் தாக்குதல் நடத்தாமல் பேச்சு வார்த்தை மூலம் தான் அணுக வேண்டும் என்பது காங்கிரஸ் கட்சியின் கொள்கையா என்பதையும் ராகுல் காந்தி தெளிவுப்படுத்த வேண்டும் என்று அவர் தெரிவித்து உள்ளார்
Tags:    

மேலும் செய்திகள்