பிரதமர் மோடி மீது கனிமொழி, வைகோ குற்றச்சாட்டு
"மத்தியில் ஆளும் பா.ஜ.க. அரசு தடுக்க தவறி விட்டது"
தூத்துக்குடியில் திமுக வேட்பாளர் கனிமொழிக்கு ஆதரவாக தேர்தல் பிரச்சார கூட்டம் நடைபெற்றது. அதில் மதிமுக பொது செயலாளர் வைகோ உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். அப்போது பேசிய கனிமொழி, ஸ்டெர்லைட் நிறுவனத்திற்கு ஆதரவாக மத்திய, மாநில அரசுகள் செயல்படுவதாக குற்றம் சாட்டினார். தொடர்ந்து பேசிய வைகோ காந்தி உருவபொம்மை எரிப்பிற்கு பிரதமர் கண்டனம் தெரிவிக்காதது ஏன் என கேள்வி எழுப்பினார்.