"20 தொகுதிகளில் திமுக போட்டியிடும்" - ஸ்டாலின்

கூட்டணி கட்சிகளுக்கு 20 தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ள நிலையில், எஞ்சியுள்ள 20 தொகுதிகளில் திமுக போட்டியிடும் என அக்கட்சியின் தலைவர் ஸ்டாலின் தெரிவித்துள்ளளார்.

Update: 2019-03-07 09:24 GMT
திமுக தொண்டர்களுக்கு அவர் எழுதியுள்ள கடிதத்தில், கூட்டணி கட்சிகளுடன் சுமூகமாக பேச்சுவார்த்தை நடத்தி தொகுதி பங்கீடு செய்யப்பட்டுள்ளதாக குறிப்பிட்டுள்ளார். தொகுதி உடன்பாடு தொடர்பான எந்தப் பேச்சுவார்த்தையும் மர்ம மாளிகையில் திரைமறைவில் நடக்கவில்லை என்றும், ரெய்டு பயம் காட்டி, மிரட்டி அமைக்கப்பட்ட செயற்கைக் கூட்டணி அல்ல என்றும் ஸ்டாலின் கூறியுள்ளார். 

தொகுதிப் பங்கீட்டில் திமுக கூட்டணி முந்தி நின்றது போல, களப்பணியிலும் அது தரப்போகிற வெற்றியிலும் நமது அணியே முந்தி நிற்கும் என்று கூறியுள்ளார். மக்களவைத் தேர்தலுடன் 21 சட்டமன்றத் தொகுதிகளுக்கான இடைத்தேர்தலும் அறிவிக்கப்பட வேண்டும் என்றும் 40 மக்களவை தொகுதிகளிலும் 21 சட்டமன்றத் தொகுதிகளிலும் மக்கள் வழங்க இருக்கும் ஜனநாயகத் தீர்ப்பு ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்தும் என்றும் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். மக்கள் தெளிவான மனநிலையில் இருப்பதாக தெரிவித்துள்ள ஸ்டாலின், ஓயாத உழைப்போடு உறுதியான உள்ளத்தோடு பணியாற்றிடுவோம் என கூறியுள்ளார்.  களம் அழைக்கிறது, காலம் நமக்கானது,  நாற்பதும் நமதாகட்டும் என்றும் ஸ்டாலின் குறிப்பிட்டுள்ளார். 
Tags:    

மேலும் செய்திகள்