பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் விருந்து : முதலமைச்சர், துணை முதலமைச்சர் பங்கேற்பு
முதலமைச்சர், துணை முதலமைச்சர் மற்றும் அமைச்சர்கள் உள்ளிட்ட அதிமுக நிர்வாகிகளுக்கு பாமக நிறுவனர் ராமதாஸ் விருந்து அளித்தார்.
விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அருகே உள்ள தைலாபுரத்தில் இந்த விருந்து நிகழ்ச்சி நடைபெற்றது. அ.தி.மு.க உடன் 10 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் கூட்டணி மலர்ந்த நிலையில், இந்த விருந்துக்கு பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் ஏற்பாடு செய்திருந்தார். இதில், முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் மற்றும் அமைச்சர்கள், அ.தி.மு.க. முக்கிய நிர்வாகிகள் கலந்து கொண்டனர். முன்னதாக, தைலாபுரம் தோட்டத்துக்கு வந்த முதலமைச்சர் மற்றும் துணை முதலமைச்சரை ராமதாஸ் மற்றும் அன்புமணி ராமதாஸ் ஆகியோர் பொன்னாடை போர்த்தியும் மலர் கொத்து கொடுத்தும் வரவேற்றனர்.