அதிமுக சார்பில் நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிட 1,737 பேர் மனு...

அதிமுக சார்பில் நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிட ஆயிரத்து 737 பேர் விண்ணப்பித்துள்ளனர்.

Update: 2019-02-15 01:36 GMT
அதிமுக சார்பில் நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிட ஆயிரத்து 737 பேர் விண்ணப்பித்துள்ளனர். 2019-ம் ஆண்டுக்கான நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிட, புதுச்சேரி உள்ளிட்ட 40 தொகுதிகளுக்கும் அதிமுக சார்பில், விருப்பமனு கோரப்பட்டது. கடந்த 4ம் தேதி முதல் கடைசி நாளான இன்றுவரை 10 நாட்கள் மனுக்கள் பெறப்பட்ட நிலையில், 7 தனித் தொகுதிகள் உள்பட 40 தொகுதிகளுக்கும் ஆயிரத்து 737 பேர் விண்ணப்பித்துள்ளனர். எனினும், 2014 தேர்தலில் போட்டியிட 4 ஆயிரத்து 500-க்கும் மேற்பட்ட விருப்ப மனு வந்த நிலையில், தற்போது ஆயிரத்து 700 ஆக குறைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
Tags:    

மேலும் செய்திகள்