"வரும் 8-ம் தேதி வரை தர்ணா போராட்டம் தொடரும்" - மம்தா பானர்ஜி அறிவிப்பு

சிபிஐ விசாரணை விவகாரத்தில் மத்திய அரசுக்கு எதிராக போர்க்கோலம் பூண்டுள்ள மம்தா பானர்ஜி, 8-ம் தேதி வரை தர்ணா போராட்டத்தில் ஈடுபடப்போவதாக அறிவித்துள்ளார்.

Update: 2019-02-05 06:24 GMT
சாரதா நிதி நிறுவனம் மோசடி புகார் தொடர்பான ஆவணங்கள் மாயமானது குறித்து கொல்கத்தா போலீஸ் கமிஷனரிடம் விசாரணை நடத்த சென்ற சிபிஐ அதிகாரிகள் பிடித்து வைக்கப்பட்டு பின்னர் விடுவிக்கப்பட்டனர். இந்நிலையில் மத்திய அரசை கண்டித்தும், அரசியல் சட்டத்தை பாதுகாக்க வலியுறுத்தியும் கொல்கத்தாவில் மெட்ரோ சினிமா முன்பு தர்ணா போராட்டத்தை மம்தா பானர்ஜி தொடங்கியுள்ளார். அப்போது செய்தியாளர்களிடம் பேசிய மம்தா பானர்ஜி, நாட்டில் நெருக்கடி நிலை அமல்படுத்தப்பட்டது போன்ற சூழ்நிலையை மத்திய அரசு உருவாக்கி இருப்பதாக குற்றம்சாட்டினார். அரசியல் சாசன உரிமைகளை பாதுகாக்கவே தர்ணா போராட்டத்தில் ஈடுபடுவதாகவும், வரும் 8-ந் தேதிக்கு பிறகு தேர்வுகள் நடைபெற இருப்பதால் அதுவரை தனது போராட்டம் தொடரும் என்றும் கூறினார். 
Tags:    

மேலும் செய்திகள்