உள்ளாட்சி தேர்தல் நடத்தியிருந்தால், கிராம சபை கூட்டம் நடத்தும் அவசியம் இல்லை - ஸ்டாலின்
உள்ளாட்சி தேர்தலை நடத்தியிருந்தால், கிராம சபை கூட்டம் நடத்த வேண்டிய அவசியமே இருந்திருக்காது என ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
உள்ளாட்சி தேர்தலை நடத்தியிருந்தால், கிராம சபை கூட்டம் நடத்த வேண்டிய அவசியமே இருந்திருக்காது என திமுக தலைவர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். விருதுநகர் மாவட்டம், சாத்தூர் தொகுதிக்குட்பட்ட சத்திரப்பட்டி ஊராட்சி சபைக் கூட்டத்தில் பேசிய அவர், சட்டமன்றத்தில் பட்டாசு தொழிலில் ஏற்படும் பிரச்சனைகள் குறித்து எடுத்துக் கூறியதாகவும், ஆனால், ஆட்சியாளர்கள் அதை பற்றி கவலைப்படவில்லை என்றார். எதிர்வரும் தேர்தல்களில் மத்திய - மாநில அரசுக்கு மக்கள் பாடம் புகட்ட வேண்டும் எனவும் ஸ்டாலின் கேட்டுக்கொண்டார்.