"பொதுப்பணித்துறை அதிகாரிகள் மீது புகார்" : ஆட்சியரிடம் ஆளும் கட்சி எம்.எல்.ஏ மனு
பொதுப்பணித்துறை அதிகாரிகள் குடிநீர் வழங்க மறுப்பதாக ராதாபுரம் தொகுதி ஆளும் கட்சி எம்.எல்.ஏ இன்பதுரை நெல்லை மாவட்ட ஆட்சியரிடம் புகார் மனு அளித்துள்ளார்.
குடிநீரில் கடல் நீர் கலப்பதால், திசையன்விளை, நாங்குநேரி பகுதி மக்கள் சிறுநீரக கோளாறால் அவதிப்படுவதாக மனுவில் அவர் குறிப்பிட்டுள்ளார். எனவே, அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்து, குடிநீர் வசதி செய்து தர வேண்டும் என இன்பதுரை கேட்டுக்கொண்டுள்ளார்.