"கைத்தறி நெசவுத்தொழிலை காக்க நடவடிக்கை தேவை" - வாசன்
மத்திய, மாநில அரசுகளுக்கு வாசன் வலியுறுத்தல்
தமிழகத்தில் கைத்தறி நெசவு தொழிலை காப்பாற்ற மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என த.மா.கா. தலைவர் வாசன் வலியுறுத்தியுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், கூட்டுறவு சங்கங்களை லாபத்தில் இயக்கவும், நெசவு தொழிலாளர்களின் வேலைவாய்ப்பை உறுதி செய்யவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொண்டுள்ளார்.