குக்கர் சின்னம் தொடர்பான வழக்கு : தேர்தல் ஆணையம் பதிலளிக்க உச்ச நீதிமன்றம் உத்தரவு
அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்திற்கு குக்கர் சின்னம் ஒதுக்க கோரி தொடரப்பட்டுள்ள வழக்கில், தேர்தல் ஆணையம் பதிலளிக்க உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்திற்கு குக்கர் சின்னம் ஒதுக்க கோரி தொடரப்பட்டுள்ள வழக்கில், தேர்தல் ஆணையம் பதிலளிக்க உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தினகரன் தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட மனு விசாரணைக்கு வந்த போது , இது தொடர்பாக பரிசீலித்து பதில் அளிப்பதாக தேர்தல் ஆணையம் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதனையடுத்து தேர்தல் ஆணையம் பதிலளிக்க உத்தரவிட்ட நீதிபதிகள், ஜனவரி 24-ம் தேதிக்கு விசாரணையை ஒத்திவைத்தனர்.