"திருவாரூர் இடைத்தேர்தலை ஒத்தி வையுங்கள்" - தேர்தல் ஆணையத்திற்கு இந்திய கம்யூ. கோரிக்கை

திருவாரூர் இடைத்தேர்தலை ஒத்திவைக்குமாறு, தலைமை தேர்தல் ஆணையத்திற்கு, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி கோரிக்கை விடுத்துள்ளது.

Update: 2019-01-02 15:27 GMT
திருவாரூர் இடைத்தேர்தலை ஒத்திவைக்குமாறு, தலைமை தேர்தல் ஆணையத்திற்கு, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி கோரிக்கை விடுத்துள்ளது. புதுடெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய அக்கட்சியின் தேசிய செயலாளர் டி.ராஜா, தமிழகத்தில் 20 தொகுதிகள் காலியாக இருக்கும் போது, ஒரு தொகுதிக்கு மட்டும் தேர்தலை திணிப்பது, அரசியல் ரீதியாகவும், நிர்வாக ரீதியாகவும் சரியான நடவடிக்கை அல்ல என்று கூறினார்.
Tags:    

மேலும் செய்திகள்