ஸ்டாலின் - தினகரன் திடீர் சந்திப்பு
சென்னையில் திமுக தலைவர் ஸ்டாலினும், அம்மா மக்கள் முன்னேற்ற கழக துணை பொது செயலாளர் தினகரனும் திடீரென சந்தித்தனர்.
சென்னையில் திமுக தலைவர் ஸ்டாலினும், அம்மா மக்கள் முன்னேற்ற கழக துணை பொது செயலாளர் தினகரனும் திடீரென சந்தித்தனர். சென்னை டிபிஐ வளாகத்தில் மூன்றாவது நாளாக உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டுள்ள இடைநிலை ஆசிரியர்களை சந்தித்து விட்டு தினகரன் புறப்பட்டார். அப்போது ஆசிரியர்களை சந்திக்க எதிரே வந்த ஸ்டாலினை தினகரன் சந்தித்தார். இருவரும் ஒருவருக்கு ஒருவர் நலம் விசாரித்து கொண்டனர். இந்த திடீர் சந்திப்பால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.