ஆலையை நிரந்தரமாக மூட நடவடிக்கை தேவை : தமிழக அரசியல் கட்சி தலைவர்கள் வலியுறுத்தல்

ஆலையை நிரந்தரமாக மூட நடவடிக்கை தேவை : தமிழக அரசியல் கட்சி தலைவர்கள் வலியுறுத்தல்

Update: 2018-12-15 22:18 GMT
ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூட தமிழக அரசு உடனடியாக சட்ட நடவடிக்கைகளில் ஈடுபட வேண்டும் என இந்திய கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் முத்தரசன் வலியுறுத்தியுள்ளார். 

ஸ்டெர்லைட் ஆலை மூடலை தொடர்வதற்கான அவசர சட்டத்தை தமிழக அரசு பிறப்பிக்க வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் பாலகிருஷ்ணன் கேட்டுக்கொண்டுள்ளார்.  

தமிழக அரசு உடனடியாக அனைத்து கட்சி கூட்டத்தை கூட்டி கடுமையான எதிர்ப்பை தெரிவித்து, ஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் திறக்க முடியாத அளவுக்கு, மக்களுக்கு நல்ல தீர்வை தர வேண்டும் என தேமுதிக பொதுச் செயலாளர் விஜயகாந்த் வலியுறுத்தியுள்ளார்.

தமிழகத்தில் தாமிர உருக்காலைகளுக்கு தடை விதித்து தொழிற்சாலைகள் சட்டத்தில் உரிய திருத்தங்களை செய்து சட்டம் இயற்றி, அதன் அடிப்படையில் இந்த வழக்கை எதிர்கொள்ள வேண்டும் என பாமக இளைஞரணி தலைவர் அன்புமணி கேட்டுக்கொண்டுள்ளார். 

தமிழக அரசு, அரசியல் ரீதியான அழுத்தங்களையும் கொடுத்து ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூட முழு மனதோடு நடவடிக்கை எடுக்க வேண்டும் என அ.ம.மு.க. துணை பொதுச் செயலாளர் தினகரன் வலியுறுத்தியுள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்