ராஜஸ்தான் முதல்வராக அசோக் கெலாட் தேர்வு
ராஜஸ்தான் முதலமைச்சராக அசோக் கெலாட் தேர்வு செய்யப்பட்டு உள்ளார்.
ராஜஸ்தான் முதலமைச்சராக அசோக் கெலாட் தேர்வு செய்யப்பட்டு உள்ளார். இதனை புதுடெல்லியில் காங்கிரஸ் மேலிட பிரதிநிதி கே. சி. வேணுகோபால் அறிவித்தார். அப்போது, அசோக் கெலாட்டும், சச்சின் பைலட்டும் உடனிருந்தனர். அசோக் கெலாட் பெயரை அறிவித்த கே. சி வேணுகோபால், துணை முதலமைச்சராக சச்சின் பைலட் பதவி ஏற்பார் என தெரிவித்தார். காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தியின் ஒப்புதலுடன், இந்த அறிவிப்பு வெளியிடப்படுவதாக மேலிட பிரதிநிதி கே. சி வேணுகோபால் விளக்கம் அளித்தார். எனவே இன்னும் ஒரிரு நாளில் ராஜஸ்தான் புதிய அமைச்சரவை பதவியேற்பு விழா நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.