வேட்டியை மடித்துக்கட்டிக்கொண்டு வயலில் இறங்கிய முதல்வர்
நாகை மாவட்டத்தைத்தொடர்ந்து மாலையில் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி திருவாரூர் மாவட்ட சேத பகுதிகளை ஆய்வு செய்தார்.
தென்பாதி என்ற இடத்தில் விவசாயி ஒருவர் கண்ணீர் மல்க தமது குறைகளை முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமியிடம் தெரிவித்தார். வேட்டியை மடித்துக்கட்டிக்கொண்டு வயலில் இறங்கிய எடப்பாடி பழனிச்சாமி விவசாயிக்கு ஆறுதல் கூறினார்.