"புயல் ஆய்வு நடவடிக்கைகளை நியாயமாக மேற்கொள்ள வேண்டும்" - திமுக தலைவர் ஸ்டாலின்
புயல் பாதித்த மாவட்டங்களில் ஆய்வு நடவடிக்கைகள் முறையாக நியாயமாக மேற்கொள்ள வேண்டும் என்று திமுக தலைவர் ஸ்டாலின் வலியுறுத்தி உள்ளார்.
புயல் பாதித்த மாவட்டங்களில் ஆய்வு நடவடிக்கைகள் முறையாக நியாயமாக மேற்கொள்ள வேண்டும் என்று திமுக தலைவர் ஸ்டாலின் வலியுறுத்தி உள்ளார். சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர் ஒரு சில இடத்தில் மட்டுமே ஆய்வு மேற்கொள்ளப் படுவதாகவும், இதனால் பாதிக்கப்பட்ட மக்கள் வேதனை அடைந்துள்ளதாகவும் தெரிவித்தார். தமிழகம் கோரிய 15 ஆயிரம் கோடி ரூபாய் போதாது என்று கூறிய ஸ்டாலின், தற்போதைய சூழலை அறிந்து மத்திய அரசு கூடுதல் நிவாரண நிதி ஒதுக்க வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்.