"அன்றைய காங்கிரஸ் ஆலய பிரவேச சத்தியாகிரகம் நடத்தியது இன்றைய காங்கிரஸ் தயாரா? " - பினராயி விஜயன் கேள்வி

பாரம்பரிய விதிமுறைகளை மீறி தான் அன்றைய காங்கிரஸ், குருவாயூரில் ஆலய பிரவேச சத்தியாகிரகம் நடத்தியதாகவும், இன்றைய காங்கிரஸ் அதுபோன்ற முடிவுக்கு தயாரா என சபரிமலை விவகாரம் தொடர்பாக காங்கிரசுக்கு, கேரள முதல்வர் பினராயி விஜயன் கேள்வி எழுப்பியுள்ளார்.

Update: 2018-11-09 07:16 GMT
பாரம்பரிய விதிமுறைகளை மீறி தான் அன்றைய காங்கிரஸ், குருவாயூரில் ஆலய பிரவேச சத்தியாகிரகம் நடத்தியதாகவும், இன்றைய காங்கிரஸ் அதுபோன்ற முடிவுக்கு தயாரா என சபரிமலை விவகாரம் தொடர்பாக காங்கிரசுக்கு, கேரள முதல்வர் பினராயி விஜயன் கேள்வி எழுப்பியுள்ளார். 1931-ஆம் ஆண்டு கேரள மாநிலம் குருவாயூரில் நடைபெற்ற ஆலய பிரவேச சத்தியாகிரகத்தின் நினைவாக, நடைபெற்ற நினைவக திறப்பு விழாவில் பேசிய பினராயி விஜயன் பாரம்பரிய விதிமுறைகளை மீறக்கூடாது என கூறுவோர் குருவாயூரில் நடைபெற்ற ஆலய பிரவேச சத்தியாகிரகத்தின் வரலாற்றை திரும்பி பார்க்க வேண்டும் என்றார். பாரம்பரிய விதிமுறைகளை மீற வேண்டும் என அன்றைய காங்கிரஸ் முடிவு செய்து குருவாயூர் சத்தியாகிரகத்தை நடத்தியதாகவும், ஆனால், இன்றைய காங்கிரஸ் அதுபோன்று முடிவு செய்ய முடியுமா என சுயபரிசோதனை செய்ய வேண்டும் எனவும் வலியுறுத்தினார். தவறான விதிமுறைகளை மீறி தான் கேரளா முன்னேறி வந்துள்ளதாக குறிப்பிட்ட கேரள முதலமைச்சர் பினராயி விஜயன், பாரம்பரிய விதிமுறைகளை மீறி தான் நாராயணகுரு சிவ பிரதிஷ்டை செய்ததாகவும் குறிப்பிட்டார்.
Tags:    

மேலும் செய்திகள்