"இலவச திட்டங்களை விஜய் கொச்சைப்படுத்தியுள்ளார்" - அமைச்சர் ஓ.எஸ்.மணியன்
"படத்தில் சொன்னதை நேரில் கூறினால் வீதியில் நடக்க முடியாது"
எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா கொண்டு வந்த திட்டங்களை நடிகர் விஜய் கொச்சைப்படுத்தியுள்ளதாக கைத்தறித்துறை அமைச்சர் ஓ.எஸ்.மணியன் தெரிவித்துள்ளார். திருத்தணியில் செய்தியாளர்களை சந்தித்த அவர், படத்தில் சொன்னதை நேரடியாக கூறினால் தமிழகத்தின் எந்த வீதியிலும் விஜய் நடந்து செல்ல முடியாது எனவும் அவர் தெரிவித்தார்.