இடைத்தேர்தல் நடைபெற உள்ள 20 தொகுதிகளுக்கு அதிமுக பொறுப்பாளர்கள் நியமனம்
இடைத்தேர்தல் நடைபெற உள்ள 20 தொகுதிகளுக்கான தேர்தல் பணிக்குழு பொறுப்பாளர்களை அதிமுக நியமித்துள்ளது.
இடைத்தேர்தல் நடைபெற உள்ள 20 தொகுதிகளுக்கான தேர்தல் பணிக்குழு பொறுப்பாளர்களை அதிமுக நியமித்துள்ளது. இதுதொடர்பாக அதிமுகவின் ஒருங்கிணைப்பாளர் பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் அறிவிப்பை வெளியிட்டுள்ளனர்.
* தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டி தொகுதிக்கு துணை முதலமைச்சர் பன்னீர்செல்வம், அமைச்சர்கள் திண்டுக்கல் சீனிவாசன், விஜயபாஸ்கர் உள்ளிட்ட 6 பேர் நியமிக்கப்பட்டுள்ளனர்.
* பெரியகுளம் தொகுதி பொறுப்பாளர்களாக துணை முதலமைச்சர் பன்னீர்செல்வம், அமைப்புச் செயலாளர் முருகுமாறன் உள்ளிட்ட 5 பேர் நியமிக்கப்பட்டுள்ளனர்.
* வடசென்னையில் பெரம்பூர் தொகுதிக்கு அமைச்சர்கள் ஜெயக்குமார், உடுமலை ராதாகிருஷ்ணன், அவைத் தலைவர் மதுசூதனன், எம்.பி. விஜிலா சத்தியானந்த் உள்ளிட்ட 10 பேர் நியமிக்கப்பட்டுள்ளனர்.
* வேலூர் மாவட்டம் ஆம்பூர் தொகுதிக்கு அமைச்சர்கள் வீரமணி, நிலோபர் கபில், அதிமுக துணை ஒருங்கிணைப்பாளர் கே.பி.முனுசாமி உள்ளிட்ட 4 பேரும்,
* தஞ்சாவூர் தொகுதிக்கு அமைச்சர்கள் துரைக்கண்ணு, வளர்மதி, எம்.பி. வைத்திலிங்கம் உள்ளிட்ட 8 பேரும் நியமிக்கப்பட்டுள்ளனர்.
* தருமபுரி மாவட்டம் அரூர் தொகுதிக்கு அமைச்சர்கள் அன்பழகன், சரோஜா, கருப்பணன், கட்சியின் அமைப்புச் செயலாளர் பொன்னையன் உள்ளிட்ட 6 பேரும் ,
* கரூர் மாவட்டம் அரவக்குறிச்சி தொகுதிக்கு மக்களவை துணை சபாநாயகர் தம்பிதுரை, அமைச்சர்கள் எம்.ஆர்.விஜயபாஸ்கர், வெல்லமண்டி நடராஜன் உள்ளிட்ட 8 பேரும்,
* திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை தொகுதிக்கு அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன், கட்சியின் அமைப்புச் செயலாளர் நத்தம் விசுவநாதன் உள்ளிட்ட 5 பேரும் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.
* இதேபோல், சிவகங்கை மாவட்டம் மானாமதுரை தொகுதிக்கு அமைச்சர்கள் செங்கோட்டையன், பாஸ்கரன், கட்சியின் செய்தித் தொடர்பாளர் கோகுல இந்திரா உள்ளிட்ட 5 பேர்.
* குடியாத்தம் தொகுதிக்கு அமைச்சர்கள் தங்கமணி, சேவூர் ராமச்சந்திரன் உள்ளிட்ட 6 பேரும் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.
* தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் தொகுதிக்கு அமைச்சர் வேலுமணி, சட்டப்பேரவை துணைத் தலைவர் பொள்ளாச்சி ஜெயராமன் உள்ளிட்ட 6 பேரும்,
* காஞ்சிபுரம் மாவட்டம் திருப்போரூர் தொகுதிக்கு அமைச்சர் சி.வி.சண்முகம், கட்சியின் செய்தி தொடர்பாளர் வளர்மதி, அமைப்பு செயலாளர் மனோஜ் பாண்டியன் உள்ளிட்ட 9 பேரும் நியமிக்கப்பட்டுள்ளனர்.
* விருதுநகர் மாவட்டம் சாத்தூர் தொகுதிக்கு அமைச்சர்கள் ஆர்.பி.உதயகுமார், ராஜேந்திர பாலாஜி, கட்சியின் அமைப்பு செயலாளர் தளவாய் சுந்தரம் உள்ளிட்ட 5 பேரும் நியமிக்கப்பட்டுள்ளனர்.
* மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் தொகுதிக்கு அமைச்சர்கள் ஆர்.பி.உதயகுமார், செல்லூர் ராஜூ, மதுரை புறநகர் மாவட்ட செயலாளர் ராஜன் செல்லப்பா உள்ளிட்ட 7 பேரும்,
* தருமபுரி மாவட்டம் பாப்பிரெட்டிப்பட்டி தொகுதிக்கு அமைச்சர் அன்பழகன், அமைப்பு செயலாளர் செம்மலை உள்ளிட்ட 4 பேரும்,
* வேலூர் மாவட்டம் சோளிங்கர் தொகுதிக்கு அமைச்சர்கள் எம்.சி.சம்பத், பாலகிருஷ்ணாரெட்டி உள்ளிட்ட 5 பேரும்,
* திருவாரூர் தொகுதிக்கு அமைச்சர் காமராஜ், அமைப்பு செயலாளர் கோபால் உள்ளிட்ட 3 பேரும் நியமிக்கப்பட்டுள்ளனர்.
* ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி தொகுதிக்கு அமைச்சர்கள் ஓ.எஸ்.மணியன், மணிகண்டன், சிறுபான்மையினர் நலப் பிரிவு செயலாளர் அன்வர் ராஜா உள்ளிட்ட 5 பேரும்,
* தூத்துக்குடி மாவட்டம் ஒட்டப்பிடாரம் தொகுதிக்கு அமைச்சர்கள் கடம்பூர் ராஜூ, ராஜலட்சுமி உள்ளிட்ட 5 பேரும் நியமிக்கப்பட்டுள்ளனர்.
* திருவள்ளூர் மாவட்டம் பூந்தமல்லி தொகுதிக்கு அமைச்சர்கள் பென்ஜமின், மாஃபா பாண்டியராஜன், நாடாளுமன்ற குழுத் தலைவர் வேணுகோபால், அமைப்பு செயலாளர் மைத்ரேயன் உள்ளிட்ட 10 பேரும் நியமிக்கப்பட்டுள்ளனர்