"நாடாளுமன்ற தேர்தலுடன் 2 தொகுதி இடைத்தேர்தல் நடைபெற வாய்ப்பு " - தமிழக தலைமை தேர்தல் அதிகாரி
18 சட்டமன்ற தொகுதிகள் காலியானதாக சட்டப்பேரவை செயலகம் மூலமாக தங்களுக்கு தெரியப்படுத்தப் பட்ட பின்னர், அதனை இந்திய தேர்தல் ஆணையத்துக்கு தெரிவிப்போம் என தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு தெரிவித்துள்ளார்.
18 சட்டமன்ற தொகுதிகள் காலியானதாக சட்டப்பேரவை செயலகம் மூலமாக தங்களுக்கு தெரியப்படுத்தப் பட்ட பின்னர், அதனை இந்திய தேர்தல் ஆணையத்துக்கு தெரிவிப்போம் என தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு தெரிவித்துள்ளார். 18 எம் எல் ஏ க்கள் தகுதி நீக்கம் உறுதி செய்யப்பட்டது குறித்த தந்தி டிவி செய்தியாளரின் கேள்விக்கு பதில் அளித்த அவர் , இதனை கூறியுள்ளார். நாடாளுமன்ற தேர்தலோடு, காலியாக உள்ள திருப்பரங்குன்றம், திருவாரூர் தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் தேர்தல் நடைபெற வாய்ப்பு உள்ளது என்றும் அவர் கூறினார். திருப்பரங்குன்றம் தொகுதி இடைத் தேர்தல் தொடர்பான வழக்கின் நிலை குறித்து தேர்தல் ஆணையத்துக்கு தெரியப்படுத்தப் பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார். இடைத்தேர்தலில் வாக்குப்பதிவு எந்திரத்துடன் யாருக்கு வாக்களித்தோம் என்ற வசதியுடன் கூடிய கருவி பயன்படுத்தப்படும் என்றும் தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு தெரிவித்தார்.