காங்கிரசுடன் கமல் கூட்டணி அமைத்தால், வேறு கட்சி வெளியேறுமா..? கமல் பதில் சொல்ல வேண்டும் - தமிழிசை

2019ம் ஆண்டு தேர்தலில் மீண்டும் மோடியே பிரதமராவார் எனவும் காங்கிரசுடன் கமல் கூட்டணி அமைத்தால், வேறு கட்சி வெளியேறுமா என கமல் பதில் சொல்ல வேண்டும் எனவும் தமிழிசை தெரிவித்தார்.

Update: 2018-10-22 06:37 GMT

நாடாளுமன்ற தேர்தலுக்கான பொறுப்பாளர்களை பாஜக நியமித்துள்ளதாக அக்கட்சியின் மாநில தலைவர் தமிழிசை தெரிவித்துள்ளார். 2019ம் ஆண்டு தேர்தலில் மீண்டும் மோடியே பிரதமராவார் எனவும் காங்கிரசுடன் கமல் கூட்டணி அமைத்தால், வேறு கட்சி வெளியேறுமா என கமல் பதில் சொல்ல வேண்டும் எனவும் தமிழிசை தெரிவித்தார். சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த அவர், அகில இந்திய அளவில் மூழ்கும் கப்பலாக காங்கிரஸ் கட்சி இருப்பதாகவும் விமர்சித்தார்.  
Tags:    

மேலும் செய்திகள்