கமல்ஹாசன் மீது, கே.சி. கருப்பணன் கடும் தாக்கு

மக்கள் நீதி மய்யம் கட்சியின் நிறுவன தலைவர் கமல்ஹாசன், முதலமைச்சர் கனவில் மிதப்பதாக சுற்றுச்சூழல் துறை அமைச்சர் கே.சி. கருப்பணன் விமர்சித்துள்ளார்.

Update: 2018-10-16 16:14 GMT
மக்கள் நீதி மய்யம் கட்சியின் நிறுவன தலைவர் கமல்ஹாசன், முதலமைச்சர் கனவில் மிதப்பதாக சுற்றுச்சூழல் துறை அமைச்சர் கே.சி. கருப்பணன் விமர்சித்துள்ளார். ஈரோடு மாவட்டம் பவானி அருகே சித்தோட்டில் என்ற இடத்தில் பள்ளி கல்வி அமைச்சர் கே.ஏ. செங்கோட்டையன் பங்கேற்ற நிகழ்ச்சிக்குப் பின், செய்தியாளர்களிடம் பேசிய அவர், தமிழக அரசு மீது, கமல்ஹாசன் பல்வேறு குற்றச்சாட்டுக்களை சுமத்தி வருவதாக குறிப்பிட்டார். 

எங்கள் ஆட்சியால், யாருக்கும் எந்த வித நஷ்டமும் ஏற்பட்டது கிடையாது என்றும் ஆனால், கமல்ஹாசனால், சில பட தயாரிப்பாளர்கள் நஷ்டத்தை சந்தித்தனர் -  சில தயாரிப்பாளர்கள் தற்கொலை செய்து கொண்டதாகவும் அமைச்சர் கே.சி. கருப்பணன் குற்றஞ்சாட்டினார்.
Tags:    

மேலும் செய்திகள்