"உடனே இடைத்தேர்தலை அறிவிக்க வேண்டும்" - திமுக தலைவர் ஸ்டாலின்

திருவாரூர், திருப்பரங்குன்றம் இடைத்தேர்தலை உடனே நடத்துமாறு திமுக தலைவர் ஸ்டாலின் வலியுறுத்தி உள்ளார். இது குறித்து அவர் வெளியிட்ட அறிக்கையில்,

Update: 2018-10-07 17:50 GMT
* 5 மாநில சட்டப்பேரவை தேர்தல் மற்றும் கர்நாடகாவில் இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில்,  திருவாரூர், திருப்பரங்குன்றம் இடைத்தேர்தல் இல்லை என அறிவித்திருப்பது

* தேர்தல் ஆணையம் உள்நோக்கத்துடன் செயல்படுகிறதோ என்ற சந்தேகத்தை  மக்கள் மனதில் விதைத்துள்ளதாக தெரிவித்துள்ளார். 

* அதிமுக அரசின் மீது மக்களுக்கு கடும் அதிருப்தி ஏற்பட்டுள்ளதால், தலைமை செயலாளர் மூலமாக இடைத்தேர்தலை தள்ளி வைக்கும் முயற்சியை நிறைவேற்றி இருப்பதாகவும்

* பருவமழை காலத்தில் இதற்கு முன் தமிழ்நாட்டில் தேர்தலே நடந்ததில்லையா எனவும் ஸ்டாலின் கேள்வி எழுப்பி உள்ளார். 

Card 5
ஜெயலலிதா சிகிச்சை பெற்றபோது 3 இடைத்தேர்தல்கள் நவம்பரில் நடைபெற்தையும் டிசம்பரில் ஆர்கே நகர் இடைத் தேர்தல் நடந்ததையும் ஸ்டாலின் சுட்டிக் காட்டியுள்ளார். 

* தலைமை தேர்தல் ஆணையமும், தலைமை செயலாளரும் மத்திய, மாநில ஆட்சியாளர்களின் ஊதுகுழல்களாக மாறுகிறார்களோ என்ற சந்தேகத்தை  நீக்க வேண்டும் எனவும்

* ஜனநாயக நெறிமுறைகளை பாதுகாக்க  திருவாரூர், திருப்பரங்குன்றம் இடைத் தேர்தல் தேதியை உடனே அறிவிக்க வேண்டும் எனவும் ஸ்டாலின் வலியுறுத்தி இருக்கிறார். 

Tags:    

மேலும் செய்திகள்