கருணாஸ் எம்.எல்.ஏ-வுக்கு 7 நாள் நீதிமன்ற காவல் : ஐபில் போராட்ட வழக்கில் எழும்பூர் நீதிமன்றம் உத்தரவு
ஐபிஎல் போட்டிக்கு எதிரான போராட்ட வழக்கில் அக்டோபர் 4ம் தேதி வரை எம்எல்ஏ கருணாஸை காவலில் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
* சென்னையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தின்போது, சர்ச்சைக்குரிய வகையில் பேசியதால், கருணாஸ் கைது செய்யப்பட்டு வேலூர் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இதற்கிடையே, கடந்த ஏப்ரல் 10ம் தேதியன்று சென்னையில் ஐ.பி.எல். போட்டிக்கு எதிராக நடந்த போராட்டம் தொடர்பாக கருணாஸ் மீது கொலை முயற்சி, ரசிகர்களை தாக்கியது உள்ளிட்ட வழக்குகள் இருந்தன. அதில், அவரை கைது செய்துள்ளதாக, திருவல்லிக்கேணி போலீசார் நேற்று இரவு தெரிவித்தனர்.
* இதையடுத்து, இந்த வழக்குகளுக்காக சென்னை எழும்பூர் 13வது குற்றவியல் நீதிமன்றத்தில் நீதிபதி கோபிநாத் முன்பு கருணாஸ் ஆஜர்படுத்தப்பட்டார். அப்போது, மற்ற குற்றங்களை நீக்கிய நீதிபதி, தடையை மீறி போராட்டம் நடத்திய வழக்கில் கருணாஸை ஏழு நாள் நீதிமன்ற காவலில் அடைக்க உத்தரவிட்டார்.