அ.தி.மு.க.வின் செயற்குழுவில் நடந்தது என்ன?

அ.தி.மு.க செயற்குழுவில் உருக்கம், வேண்டுகோள் என பரபரப்பு சம்பவங்கள் நடந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

Update: 2018-08-24 07:55 GMT
அ.தி.மு.க.செயற்குழு கூட்டம் அக்கட்சியின் தலைமை அலுவலகத்தில் அவைத் தலைவர் மதுசூதனன் தலைமையில் நடைபெற்றது. கூட்டத்தில் பேசிய கட்சியின் ஒருங்கிணைப்பாளரும் துணை முதலமைச்சருமான ஓ. பன்னீர்செல்வம், அ.தி.மு.க.வினருக்கு ஆட்சியை பற்றிய கவலையில்லை எனவும்  கட்சி தான் பெரிது எனவும் தெரிவித்ததாக  கூறப்படுகிறது.டெல்லியில் ராணுவ அமைச்சர் நிர்மலா சீதாராமன் தம்மை  சந்திக்க  மறுத்தது குறித்து வேதனை தெரிவித்த அவர், அது தனி மனிதனுக்கு  ஏற்பட்ட அவமானம் அல்ல, ஒன்றரை கோடி தொண்டர்களை கொண்ட அ.தி.மு.கவுக்கு ஏற்பட்ட அவமானம் என்றும் கூறினாராம்.

கட்சியின் துணை ஒருங்கிணைப்பாளர்களான ஆர். வைத்திலிங்கம், கே.பி. முனுசாமியும்,  மத்திய அரசுக்கு தமிழக அரசு அடி பணிந்து போவதாக தொண்டர்கள் கருதுவதாகவும், அதற்கான காரணங்களை தொண்டர்களிடம் விளக்க வேண்டும் என்றும்  பேசினார்களாம்.  அப்போது குறுக்கிட்ட முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி, ஜெயலலிதா வழியில் நடக்கும் தற்போதைய அரசு, எதிர்க்க வேண்டிய விஷயங்களை எதிர்ப்பதாகவும், ஆதரிக்க வேண்டிய விஷயங்களை ஆதரிப்பதாகவும் பதிலளித்தாராம் .எந்த நேரத்தில் தேர்தல் வந்தாலும் அதை அ.தி.மு.க. எதிர்கொண்டு , வெற்றிபெற தயாராக இருப்பதாகவும் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்தாராம்.

Tags:    

மேலும் செய்திகள்