3 முறை பிரதமரான வாஜ்பாயின் சாதனைகள்

இந்திய அரசியலில் மிக முக்கிய தலைவராக கருதப்படும் வாஜ்பாய், நாட்டின் பிரதமராக 3 முறை பதவி வகித்துள்ளார். அவரது பதவிக் காலத்தில் மேற்கொள்ளப்பட்ட சாதனைகளைச் சொல்கிறது இந்த தொகுப்பு.

Update: 2018-08-16 15:48 GMT
* பாஜகவின் பிதாமகனாக கருதப்படும் அடல் பிஹாரி வாஜ்பாய் மூன்று முறை பிரதமராக பதவி வகித்துள்ளார். 
* கடந்த 1996 ஆம் ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தலில் பாஜக தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்ததால் அப்போதைய குடியரசு தலைவர் சங்கர் தயாள் சர்மா, வாஜ்பாயை ஆட்சி அமைக்க அழைப்பு விடுத்தார். 
* இதையடுத்து நாட்டின் 10-வது பிரதமராக முதல் முறையாக வாஜ்பாய் பதவியேற்றார்.  ஆனால் நாடாளுமன்றத்தில் பெரும்பான்மையை நிரூபிக்க முடியாததால் 13 நாட்களிலேயே வாஜ்பாய் பதவி விலகினார். 
* பின்னர் 1998 ஆம் ஆண்டு வாஜ்பாய் இரண்டாவது முறையாக பிரதமரானார். ஆனால் அவரது பதவிக் காலம் 13 மாதங்கள் மட்டுமே நீடித்தது. கூட்டணியில் இருந்த அதிமுக விலகிக் கொண்டதால்  பெரும்பான்மை இல்லாமல் வாஜ்பாய் பதவி விலகினார். 
* இதையடுத்து நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தலில் பாஜக அதிக இடங்களில் வெற்றி பெற்று, தனிப் பெரும்பான்மையுடன் ஆட்சி அமைத்தது. 
* 1999 ஆம் ஆண்டு மூன்றாவது முறையாக பிரதமராக பதவியேற்று கொண்ட வாஜ்பாய், 5 ஆண்டு ஆட்சி காலத்தை வெற்றிகரமாக பூர்த்தி செய்தார்.
* காங்கிரஸ் அல்லாத கட்சி 5 ஆண்டு காலம் மத்தியில் ஆட்சி புரிந்த சாதனையை வாஜ்பாய் படைத்தார். 
* வாஜ்பாய் பிரதமராக இருந்த போது, பொக்ரான் அணுகுண்டு சோதனை நடத்தப்பட்டு, இந்தியா அணு ஆயுத நாடாக அறிவிக்கப்பட்டது. 
* பாகிஸ்தானுடனான கார்கில் போரில் இந்தியா
வெற்றி பெற்றது, வாஜ்பாயின் மதிப்பை மேலும் உயர்த்தியது. 
* கடந்த 2004ஆம் ஆண்டு மேற்கொண்ட பொருளாதார சீர்திருத்த நடவடிக்கைகளால் நாட்டின் ஒட்டுமொத்த பொருளாதார வளர்ச்சி 8 சதவீதத்தை தாண்டியது.பணவீக்கம் 4 சதவீதத்திற்கும் குறைந்தது.
* வாஜ்பாய் பதவி காலத்தில் கொண்டு வரப்பட்ட தங்க நாற்கர சாலை திட்டம் நாட்டின் மிக முக்கிய திட்டங்களில் ஒன்றாக கருதப்படுகிறது. 
*டெல்லி, மும்பை, கொல்கத்தா, சென்னை ஆகிய நகரங்களை இணைக்கும் 5 ஆயிரத்து 846 கிலோ மீட்டர் தூரத்திற்கு தேசிய நெடுஞ்சாலைகளை 4 வழிப்பாதைகளாக மாற்றியமைக்கும் இத்திட்டத்தை 1998ஆம் ஆண்டு அப்போதைய பிரதமர் வாஜ்பாய் தொடங்கி வைத்தார். 
* பாரத் அலுமினியம் நிறுவனம், இந்துஸ்தான் சிங்க் நிறுவனம், இந்தியன் பெட்ரோ கெமிக்கல் கார்ப்பரேஷன் ஆகியவற்றை  பொதுத்துறை நிறுவனங்களாக மாற்றி,தனியார் முதலீடுகள்
அதிகளவில் ஈர்க்கப்பட்டது, வாஜ்பாய் பதவிக் காலத்தில் தான். 
* இதேபோல் தொலைதொடர்பு துறையில் பல்வேறு சீர்திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டன. 
* இது போன்று பல்வேறு திட்டங்களை தமது பதவி காலத்தில் செயல்படுத்திய வாஜ்பாயின் சேவைகளை பாராட்டி, அவருக்கு நாட்டின் மிக உயரிய விருதான "பாரத ரத்னா" விருது கடந்த 2015ஆம் ஆண்டு  வழங்கப்பட்டது.


Tags:    

மேலும் செய்திகள்