தினகரன் வீடு முன்பு தீ விபத்து : தீ காயங்களுடன் சாலையில் நடந்து சென்ற 'புல்லட் பரிமளம்'

அ.ம.மு.க. கட்சியில் இருந்து நீக்கப்பட்ட புல்லட் பரிமளம் என்பவர் கொண்டு வந்த பெட்ரோல் குண்டு அவரது காரிலேயே வெடித்தது.

Update: 2018-07-29 08:02 GMT
சென்னை அடையாறில் தினகரன் வீட்டின் முன்பு பெட்ரோல் குண்டு வீச முயற்சி. அ.ம.மு.க. கட்சியில் இருந்து நீக்கப்பட்ட புல்லட் பரிமளம் என்பவர் கொண்டு வந்த பெட்ரோல் குண்டு அவரது காரிலேயே வெடித்தது. தினகரன் வீடு அமைந்துள்ள தெருவில் பரிமளத்தின் காரில் இருந்த பெட்ரோல் குண்டு வெடித்தது. தெருவில் இருந்த ஆட்டோ ஓட்டுநர் உள்பட 3 பேர் காயம். புல்லட் பரிமளத்தின் கார் ஓட்டுநர் கைது, மேலும் புல்லட் பரிமளத்திற்கு போலீஸ் வலைவீச்சு.


தினகரன் வீடு முன்பு தீ விபத்து : தீ காயங்களுடன் சாலையில் நடந்து சென்ற 'புல்லட் பரிமளம்' காஞ்சிபுரம் மாவட்டத்தில் அம்மா மக்கள் முன்னேற்ற கழக கட்சியின் நகர செயலாளராக இருந்தவர் புல்லட் பரிமளம். இவர் கட்சிக்கு விரோதமாக செயல்படுவதாக கூறி கட்சியில் இருந்து நீக்கப்பட்டார். இதனால் விரக்தி அடைந்த புல்லட் பரிமளம், தினகரன் வீட்டுக்கு காரில் பெட்ரோல் கேன்களுடன் வந்துள்ளார். இதுகுறித்து தினகரனின் உதவியாளர்கள் பரிமளத்திடம் விசாரித்து கொண்டிருக்கையில் அவர் காரில் இருந்த பெட்ரோல் கேனை பற்ற வைத்ததால் கார் தீ பற்றி எரிந்தது. இதில் புல்லட் பரிமளமும் தீயில் சிக்கி படுகாயமடைந்து, தீ காயங்களுடன் சாலையில் நடந்து சென்றார்.

இது குறித்து தினகரன் ஆதரவாளர்கள், புல்லட் பரிமளம் பெட்ரோல் குண்டுகளை வீச வந்ததாக தெரிவிக்கின்றனர். 'கொடும்பாவி எரிக்க முயன்றிருக்கலாம்' என்கிறது காவல்துறை போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து விசாரித்தனர். பெட்ரோல் குண்டுகள் ஏதும் கைபற்றாத நிலையில் புல்லட் பரிமளம் கொண்டு வந்த அரிவாளை போலீசார் கைபற்றினர். பரிமளம் காரில் வைகோல்கள் இருந்ததால், அவர் கொடும்பாவி எரிக்கும் முயற்சியில் வந்திருக்காலம் என்றும் எதிர்பாரத விதமாக இந்த தீ விபத்து நிகழ்ந்திருக்கலாம் என்றும் போலீசாரின் முதல் கட்ட விசாரணையில் கூறப்படுகிறது.
Tags:    

மேலும் செய்திகள்